முகப்பு
வேலைவாய்ப்பு

தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

புணே தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

Updated On : 29 மார்ச், 2026 at 1:08 PM
தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் வேலை - டிஐஎப்ஆர்
பகிர்:

இந்திய அரசின் அணுசக்தித் துறையின்கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமான புணே தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 2026/06

பணி: Project Scientific Officer

காலியிடம்: 1

வயது வரம்பு: 31-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,03,400

தகுதி: இயற்பியல், வானியற்பியல், கணிதம் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Engineer

1.SRC Hardware

காலியிடம்: 1

வயது வரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. OMG Software

காலியிடங்கள்: 2

வயது வரம்பு: 31-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல், கணினி அறிவியல் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. SDP Software

காலியிடம்: 1

வயது வரம்பு: 28-க்குள் இருக்கவேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல், கணினி அறிவியல் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. SRC Software

காலியிடங்கள்: 4

வயது வரம்பு: 31-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணியிடங்களுக்கான மாதம் ரூ.1,03,400.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ncra.tifr.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.3.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Advertisement for the posts Scientific and Technical posts for the Square Kilometre Array (SKA) Consortium.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.