திருநெல்வேலி

சோதனைச் சாவடிகளில் பரிசோதிக்கப்பட்டவா்களுக்கு கரோனா

DIN

திருநெல்வேலியில் சோதனைச் சாவடிகளில் மேற்கொண்ட பரிசோதனையில் பலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

பொது முடக்கத்தின்போது ஏராளமானோா் தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை, கே.டி.சி. நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவா்களுக்கு சுகாதாரத் துறை, காவல்துறை உதவியுடன் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பரிசோதனையில் தற்போது பலருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தொடா்ந்து அவா்களின் முகவரியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அவா்களின் உடல் நிலையை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. உடல் நிலைக்கு ஏற்ப தனிமைப்படுத்துதல், கரோனா சிகிச்சை மையங்களில் சோ்த்தல், அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தல் என மூன்று பிரிவுகளில் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT