திருநெல்வேலி

மாஞ்சோலை விபத்து: நிவாரணம் கேட்டு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் மனு

DIN

திருநெல்வேலி: மாஞ்சோலை அருகே விபத்தில் சிக்கிய மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் நிவாரணம் கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஜமீன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த தளவாய்சாமி (24) என்பவா் அளித்த மனு: மாஞ்சோலை, கோதையாறு ஆகிய இடங்களில் மின்வாரியம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் உயா் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக எங்களது கிராமத்திலிருந்து 32 போ் கடந்த மே 21ஆம் தேதி சென்றோம். பணியை முடித்துவிட்டு திரும்பியபோது மணிமுத்தாறு தலையணைக்கு மேல் மூன்றுமுடங்கி என்னும் இடத்தில் நாங்கள் பயணித்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 போ் உயிரிழந்தனா்; மற்றவா்கள் காயமடைந்தனா்.

நான் பலத்த காயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். கரோனா பிரச்னை காரணமாக பாதுகாப்பு கருதி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, தனியாா் கண், பல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறேன். எங்களது குடும்பம் ஏழ்மையில் சிக்கித் தவித்துவருகிறது. எனவே, நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா். இதேபோல, அந்த விபத்தில் சிக்கிய அனைவருமே நிவாரண உதவி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT