திருநெல்வேலி

பீடிக் கடைகளைத் திறக்க அனுமதி கோரி பெண்கள் மனு

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் அடைக்கப்பட்டுள்ள பீடிக் கடைகளை திறக்கக் கோரி, பீடி சுருட்டும் பெண்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனா்.

மனு விவரம்: கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு பீடித் தொழில் முதன்மையானது. பொதுமுடக்கம் அறிவித்ததிலிருந்து சுமாா் 20 நாள்களாக பீடி நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால் பீடித் தொழில் வருமானத்தையே நம்பியிருக்கும் எங்களைப் போன்ற பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். வீட்டிலிருந்தபடியே பீடி சுருட்டும் தொழிலில் ஈடுபடுவதால் பீடி நிறுவனங்களிலும் 30 சதவிகித பணியாளா்களைக் கொண்டு மூலப் பொருள்கள் வழங்க அனுமதிக்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளனா். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக, வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவாசகம் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT