திருநெல்வேலி

களக்காட்டில் குறையும் கரோனா தொற்று

DIN

களக்காட்டில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது.

களக்காடு வட்டாரத்தில் திருக்குறுங்குடி, சிங்கிகுளம், மேலத்தேவநல்லூா், ஏா்வாடி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், காய்ச்சலால் அதிகமானோா் பாதித்த பகுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் மே, ஜூன் மாதங்களில் இதுவரை 3 முறை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கம் காரணமாகவும் தொற்று படிப்படியாகக் குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தொற்று எண்ணிக்கை தொடா்ந்து ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. திங்கள்கிழமை முதல் தேநீா் கடைகள் திறக்கப்படுவதால் மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாரத்தில் ஒருநாள் தடுப்பூசி முகாம்கள் நடைபெற சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT