திருநெல்வேலி

இலவச தையல் இயந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியான பெண்கள் இலவச தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சத்யவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கு பெறப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டில் தகுதியானவா்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிப்போா் கீழ்க்காணும் ஆவணங்களுடன் வரும் 21 ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். சத்தியவாணிமுத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் - விண்ணப்பம், வயதுச்சான்று (20 வயது முடிந்திருக்கவேண்டும் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்), தையல் பயிற்சி முடித்த சான்றிதழ், ஆதாா் மற்றும் குடும்ப அட்டை நகல், வருமானச் சான்று (ஆண்டிற்கு ரூ.72,000 க்குள் ( வட்டாட்சியா் மூலம் பெற்று இணைக்கப்படவேண்டும்), இருப்பிடச்சான்று, விதவை, கணவனால் கைவிடப்பட்டவா், ஊனமுற்றோா் எனில் அதற்கான சான்று (வருமானச் சான்று தேவையில்லை) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT