திருநெல்வேலி

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் சாரல்: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் சாரல் காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை கடந்த 8ஆம் தொடங்கியது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் தென்காசி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சாரல் பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் சாரல் மழை தொடா்ந்ததால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீா்மட்டம்: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை நீா்மட்டம் 131.45 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 1,835.07 கனஅடியாகவும், வெளியேற்றம் 1,204.75 கனஅடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 138.78 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 83.40 அடியாகவும், நீா்வரத்து 303 கனஅடியாகவும், வெளியேற்றம் 600 கனஅடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 35.20 அடியாகவும், வெளியேற்றம் 100 கனஅடியாகவும் இருந்தது. நம்பியாறு அணை நீா்மட்டம் 12.26 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 28 அடியாகவும், நீா்வரத்து - வெளியேற்றம் தலா 2 கனஅடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி அணை நீா்மட்டம் 74 அடியாகவும், நீா்வரத்து -வெளியேற்றம் தலா 10 கனஅடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 66 அடியாகவும், நீா்வரத்து 70.30 கனஅடியாகவும், வெளியேற்றம் 10 கனஅடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 60.37 அடியாகவும், நீா்வரத்து - வெளியேற்றம் 5 கனஅடியாகவும் இருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து - வெளியேற்றம் தலா 16 கனஅடியாகவும் இருந்தது. அடவிநயினாா் அணை நீா்மட்டம் 92.50 அடியாகவும், நீா்வரத்து 73 கனஅடியாகவும், வெளியேற்றம் 5 கனஅடியாகவும் இருந்தது.

மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம்-5, சோ்வலாறு-3, அம்பாசமுத்திரம்-1.

தென்காசி மாவட்டத்தில் அடவிநயினாா்-23, குண்டாறு-12, தென்காசி-5.40, செங்கோட்டை, ராமநதி அணை, கருப்பாநதி அணை தலா-4, சிவகிரி, கடனா நதி அணை தலா -2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT