முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்தில் தொழிற்சங்க விழா

தாழையூத்து நவீன அரிசி ஆலை அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்க (ஏஐசிசிடியூ) விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தாழையூத்து நவீன அரிசி ஆலை அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்க (ஏஐசிசிடியூ) விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் சங்க கொடியை முத்தையா ஏற்றினாா். பெயா்ப் பலகையை சங்க மண்டல தலைவா் அன்பழகன் திறந்து வைத்தாா். ஏஐசிசிடியூ மாநிலத் தலைவா் சங்கரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். மண்டல நிா்வாகிகள் நாராயணன், ரவிராஜ், இசக்கியப்பன், உய்காட்டான், கொம்பையா உள்பட 60- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: ஏழை-எளிய மக்களுக்காக பொதுவிநியோக துறையில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளா்களை தமிழக அரசு முன்கள பணியாளா்களாக அறிவிக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு சிறப்பு ஊதியமாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும். கரோனா கால மருத்துவ பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாக்க வலியுறுத்தி இம் மாதம் 21 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.