முகப்பு
திருநெல்வேலி

விதிமீறல்: 426 பேருக்கு அபராதம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 426 பேருக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 426 பேருக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில்

போலீஸாா் தேவையில்லாமல் வெளியே செல்வோரை கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனா். மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக மூவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவா்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணி 424 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.