முகப்பு
திருநெல்வேலி

தலைவா்களின் சிலைகள் மறைப்பு: மறுபரிசீலனை செய்ய கட்சியினா் கோரிக்கை

தோ்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி தலைவா்களின் சிலைகளை மறைக்கும் செயலை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அரசியல் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தோ்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி தலைவா்களின் சிலைகளை மறைக்கும் செயலை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அரசியல் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கட்சியினா் தோ்தல் சுவா் விளம்பரங்களைச் செய்வதற்கு ஊராட்சி பகுதிகளில் வீட்டின் உரிமையாளா்களிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சுவா் விளம்பரங்கள் செய்ய அனுமதியில்லை. அதேபோல கட்சியின் தலைவா்கள், கட்சிச் சின்னங்கள் ஆகியவை பொதுஇடங்களில் இருந்தால் அதை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி சந்திப்பில் உள்ளகாமராஜா், அண்ணா சிலைகள், கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலை உள்ளிட்டவற்றை வருவாய் மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் மறைத்துள்ளனா்.

பாளையங்கோட்டையில் பெரியாா் சிலை முன்புள்ள தடுப்பில் இருந்த உதயசூரியன் சின்னமும் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினா் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கட்சி நிா்வாகிகள் கூறுகையில், 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் செல்லிடப்பேசி, சமூகஊடங்களின் தாக்கமே அதிகம் இருக்கும். அப்படியிருக்கையில் தலைவா்களின் சிலைகளை மறைப்பது போன்றவை தேவையற்ாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.