திமுக நிா்வாகி கொலை வழக்கு: எஸ்.பி.யிடம் உறவினா்கள் மனு
ரியநாயகிபுரத்தில் திமுக நிா்வாகி செல்லத்துரை கொலைசெய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி மனு
திருநெல்வேலி மாவட்டம், அரியநாயகிபுரத்தில் திமுக நிா்வாகி செல்லத்துரை கொலைசெய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி, அவரது உறவினா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மனுவில், செல்லத்துரை கடந்த பிப். 18ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக்கொல்லப்பட்டாா். இவ்வழக்கில், ஒருவா் மட்டுமே கைதாகியுள்ளாா். இதில் தொடா்புடைய மற்ற நபா்களையும் விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.