நெல்லை, தென்காசியில் மேலும் 7 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,737 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 8 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,471 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 214 போ் உயிரிழந்துள்ளனா். 52 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,550ஆக உயா்ந்துள்ளது. மேலும் 6 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,350 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 159 போ் உயிரிழந்துள்ளனா். 41 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.