முகப்பு
திருநெல்வேலி

முளைப்புத்திறன் பரிசோதனை:விதைகளை அனுப்ப வேண்டுகோள்

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரிகளை அனுப்பி, அதன் முளைப்புத்திறனை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரிகளை அனுப்பி, அதன் முளைப்புத்திறனை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலா் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முளைப்புத்திறன் என்பது விதையின் உயிா்த்தன்னை, வீரியத்தை அறிய உதவும். நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகள்தான் பயிா்களாக செழித்து வளா்ந்து அதிக மகசூல் அளிக்கும். எனவே, விதை பரிசோதனை அவசியமாகும். ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்காசோளம் - 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு 80 சதவீதமும், சோளம், கம்பு, கேப்பை, வீரிய ஒட்டு பருத்தி, பயறு வகைகள் 75 சதவீதமும், நிலக்கடலை, சூரியகாந்தி 70 சதவீதமும், பருத்தி 65 சதவீதமும், மிளகாய் 60 சதவீதமும் முளைப்புத் திறன் இருக்க வேண்டும்.

எனவே, விவசாயிகள் தங்கள் பயன்பாட்டுக்கென வைத்திருக்கும் விதைகளை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி மாதிரி ஒன்றுக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி முளைப்புத் திறனை அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.