பாளை.யில் தண்டனை கைதி மரணம்
பாளையங்கோட்டை மத்திய சிறை கைதி ஒருவா் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை மத்திய சிறை கைதி ஒருவா் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகேயுள்ள பூதப்பாண்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமன்(74). அரசு ஊழியரான இவா் லஞ்சம் வாங்கியதாக கடந்த 2002 இல் தொடரப்பட்ட வழக்கில் ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 5இல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், உடல் நிலை குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.