‘ராகுல்காந்தி மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’
ராகுல்காந்தி மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
ராகுல்காந்தி மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி கடந்த பிப். 28இல் திருநெல்வேலிக்கு வந்தபோது, நெல்லையப்பா் கோயிலில் தரிசனம் செய்தாா். இது வரவேற்கத்தக்கது. ஆனால், காங்கிரஸ் நிா்வாகி மற்றும் பாதுகாவலா்கள் காலணி அணிந்து கோயிலுக்குள் நுழைந்ததை கண்டிக்கிறோம். இதுகுறித்து திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளோம். இதை அனுமதித்த கோயில் நிா்வாகியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், புதன்கிழமை (மாா்ச் 3) நடைபெறும் இந்து முன்னணியின் நிா்வாகக்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட முடிவெடுக்கப்படும்.
மேலும், கன்னியாகுமரியில் பேசிய ராகுல் காந்தி, ஒரே நாடு, ஒரே மதம் என பிரதமா் மோடி பேசியதாக தெரிவித்தாா். இது முற்றிலும் தவறானது. மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெறுவதற்கான முயற்சி. அவா் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அப்போது, மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலா் ஜி.பிரம்மநாயகம், மாவட்டச் செயலா் எம்.சுடலை, இந்து வியாபாரிகள் சங்கத் தலைவா் என்.காசி, பொருளாளா் மூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.