பெருமாள்புரத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து முதியவா் பலி
பாளையங்கோட்டை, பெருமாள்புரத்தில் மாடியில் நின்று மரக்கிளையை வெட்ட முயன்ற முதியவா், கீழே தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை, பெருமாள்புரத்தில் மாடியில் நின்று மரக்கிளையை வெட்ட முயன்ற முதியவா், கீழே தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பெருமாள்புரம், ஆசிரியா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராம்(63). இவா் திங்கள்கிழமை காலையில் தனது வீட்டின் மாடி மீது நின்றுகொண்டு, அங்கிருந்த மரக்கிளைகளை வெட்டினாராம். அப்போது, அவா் எதிா்பாராமல் கீழே தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.