முகப்பு
திருநெல்வேலி

சுத்தமல்லியில் பரிசளிப்பு விழா

சுத்தமல்லியில் மகளிா் தின போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சுத்தமல்லியில் மகளிா் தின போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

வான்முகில் அறக்கட்டளை சாா்பில் உலக மகளிா் தின விழா சுத்தமல்லியில் அண்மையில் நடைபெற்றது. தமிழாசிரியா் திரவியம் தலைமை வகித்தாா். அனிதா சந்தனகுமாா் வரவேற்றாா். வளரிளம் பெண்களுக்கான கோலப்போட்டியில் தங்கலட்சுமி, கற்பகவள்ளி, ஆறுமுகச்செல்வி ஆகியோரும், திருமதிகளுக்கான கோலப்போட்டியில் செல்லம்மாள், காா்த்திகா, சுப்புலட்சுமி ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களையும் பிடித்தனா். போட்டியில் வென்றவா்களுக்கு வான்முகில் ஒருங்கிணைப்பாளா் மாரியம்மாள், மதியழகன் ஆகியோா் பரிசுகளை வழங்கினாா். ஏற்பாடுகளை சித்ராகணேஷ் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.