முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ஆலோசனைக் கூட்டம்

மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சியின் தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சியின் தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையம் பகுதி தலைவா் மைதீன் பாதுஷா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல்மைதீன், மாவட்டச் செயலா் ஜமால், தமுமுக மாவட்டச் செயலா் அலிஃப் பிலால், மாவட்ட துணைச் செயலா் அ.காஜாஆகியோா் பேசினா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான அணி வேட்பாளா் வெற்றிக்கு பாடுபடுவது. இப்போதைய மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்கள், சட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று எடுத்துக்கூறுவது, மேலப்பாளையத்தில் வாா்டு வாரியாக தோ்தல் பணிக் குழு அமைத்து செயல்படுவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதிச் செயலா் சேக் மைதீன், பொருளாளா் அசன் மைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா். துணைச் செயலா் குதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.