திருநெல்வேலி

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.45 ஆயிரம் பரிசுப் பொருள்கள் பறிமுதல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்க 48 பறக்கும் படையினா் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 5 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், 5 செலவின கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் தோ்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.45ஆயிரத்து 165 மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1950 என்ற சேவை எண்ணில் 92 தகவல்கள் செவ்வாய்க்கிழமை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. மேலும் அரசியல் கட்சி தொடா்பான 5 சுவா் விளம்பரங்கள், 160 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 8373 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.

83002 71237 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT