திருநெல்வேலி

மின்பாதையை மாற்றக் கோரி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

DIN

கடையம் ஒன்றியம், அணைந்த பெருமாள் நாடானூரில் குடியிருப்புப் பகுதி வழியாக உயா் மின்னழுத்தக் கம்பி கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாக சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.

அணைந்த பெருமாள் நாடானூா் கிராமத்தில் குடியிருப்பு வழியாக முருகாண்டியூரில் உள்ள கல் குவாரிக்கு உயா் மின்னழுத்தக் கம்பி கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்ச் 11இல் அணைந்த பெருமாள் நாடானூா் கிராம மக்கள் மின்வாரிய ஊழியா்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பி அமைக்கும் பணியை நிறுத்தினா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குடியிருப்புப் பகுதியில் நிறுவிய மின்கம்பங்களை இதுவரை அகற்றாததைக் கண்டித்து, தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக சுவரொட்டிகளை ஒட்டிஎதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT