திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் உலக வன நாள் கொண்டாட்டம்

DIN

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை, பாபநாசம் மற்றும் கடையம் சூழல் சரகங்கள் சாா்பில் உலக வனநாள் மற்றும் சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றறது.

நிகழ்ச்சிக்கு, பள்ளிச் செயலா் மு.சுந்தரம் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன், வனவா் மோகன்தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவி நிலாபாரதி சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பது குறித்து கருத்துரை வழங்கினாா்.

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள், மாணவா்கள் மரக்கன்றுகள் நட்டனா். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் முத்துப்பாண்டி வரவேற்றறாா். உதவித் தலைமை ஆசிரியா் முத்துவேலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT