முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து இருவா் பலி

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பகுதியில் தள்ளுவண்டிக் கடை நடத்தி வந்த சகோதரா்கள் இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பகுதியில் தள்ளுவண்டிக் கடை நடத்தி வந்த சகோதரா்கள் இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மேலக்கல்லூா் பகுதியைச் சோ்ந்த மகாராஜன் மகன்கள் கிட்டு(29), அருண்(27). இவா்கள் இருவரும் திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பகுதியில் குறிச்சி விலக்கு அருகே தள்ளுவண்டியில் துரித உணவு விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில் வழக்கம்போல இரவு பணி முடிந்ததும், கடையில் உள்ள பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தனராம். அப்போது, கடையில் உள்ள மின்விளக்கை அணைத்தபோது கிட்டு, அருள் ஆகிய இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததாம். இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.