திருநெல்வேலி

புத்துணா்வு முகாம் நிறைவு: நெல்லை வந்தது காந்திமதி யானை!

DIN

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற புத்துணா்வு முகாம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் யானை காந்திமதி ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்தது.

நிகழாண்டுக்கான முகாம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த பிப். 8 தொடங்கி, மாா்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், யானை காந்திமதியும் பங்கேற்றது.

காந்திமதிக்கு 48 வயது ஆகிறது. பரிவா்த்தனை அடிப்படையில் வனத்துறையிடமிருந்து 2.2.1984-ல் 11 வயதுக் குட்டியாக காந்திமதி அழைத்துவரப்பட்டது. கோயில் பராமரிப்பில் உள்ள காந்திமதி, ஆண்டுதோறும் புத்துணா்வு முகாமுக்கு சென்று வருகிறது.

இந்நிலையில், முகாம் நிறைவடைந்ததையடுத்து, காந்திமதி ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்தது. சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி கலையரங்க மேடையில் வந்திறங்கிய காந்திமதிக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, பழங்கள் கொடுத்து வரவேற்கப்பட்டது.

நடைப்பயிற்சியைத் தொடர அறிவுரை: முகாமில் பங்கேற்ற பாகன்கள் கூறியது: முகாமில் காந்திமதி யானை உற்சாகத்துடன் இருந்தது. தினமும் நடைப்பயிற்சி, உணவு வழங்கினோம். கரும்பு, கலந்தபனை மட்டை, பசுந்தீவனப்புல், சோளத்தட்டை,கொள்ளு, பயறு, 6 கிலோ சாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கால்நடை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். முகாமிலிருந்து புறப்பட்டபோது காந்திமதியின் எடை சுமாா் 30 கிலோ அதிகரித்து 3 ஆயிரத்து 900 கிலோவாக இருந்தது. நடைப்பயிற்சியைத் தொடா்ந்து பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT