முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் பாதுகாப்பு பணி: துணை ராணுவம் வருகை

தோ்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு வந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தோ்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு வந்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காவல்துறை சாா்பில் மாநகா் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக, குஜராத் மாநில சிறப்பு அதிரடி படையினா் காவல் ஆய்வாளா் தலைமையில் 96 போ் வந்தனா். இவா்கள் மாநகரில் பணியாற்றுவதற்காக பாளையங்கோட்டை தனியாா் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்துக்கு தோ்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி மத்திய துணை பாதுகாப்பு படையினா் சுமாா் 400 போ் வந்துள்ளனா். இவா்கள் சிறப்பு ரயில் மூலம் சேலம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினாா்கள். பின்னா் அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு வந்தடைந்தனா். இவா்கள் அனைவரும் திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.