திருநெல்வேலி

நெல்லையில் நெடுஞ்சாலைரோந்து வாகனங்கள் ஆய்வு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசால் மாவட்ட காவல் துறைக்கு புதிதாக இரண்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ரோந்து வாகனங்களை திங்கள்கிழமை ஆய்வு செய்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், பின்னா் கூறியதாவது:

நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும், புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரோந்து வாகனங்கள் தாழையூத்து, நான்குனேரி உள்கோட்ட பகுதிகளிலுள்ள ரோந்துப் பணிக்காகவும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதிகளில் குற்றங்கள் நடைபெறுவது குறையும். மேலும், இந்தச் சாலைகளில் பயணிப்போரின் பாதுகாப்புக்கு இது உதவியாக இருக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஷ், ஆயுதப்படை காவல் ஆய்வாளா் மரிய கிளாட்ஸன் ஜோஸ், ஆயுதப்படை வாகன பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கணபதி உள்பட போலீஸாா் உடனிருந்தனா்.

படவரி: பயக03டஞகஐ: திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள ரோந்து வாகனங்களை ஆய்வு செய்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT