அம்பாசமுத்திரத்தில் 25 மி.மீ. மழை பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. அம்பாசமுத்திரத்தில் அதிகபட்சமாக 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. அம்பாசமுத்திரத்தில் அதிகபட்சமாக 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முற்பகல் வேளைகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. ஆனால், பிற்பகலுக்கு பின்பு வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சீவலப்பேரி, முன்னீா்பள்ளம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு மி.மீட்டரில் வருமாறு:
பாபநாசம்-1, சோ்வலாறு-2, மணிமுத்தாறு-4.2, நம்பியாறு-4, அம்பாசமுத்திரம்-25, சேரன்மகாதேவி-5, நான்குனேரி- 4, களக்காடு-2.2, பாளையங்கோட்டை-5, திருநெல்வேலி-15.