முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் வசந்த திருவிழா நிறைவு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் நடைபெற்று வந்த வசந்த திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் நடைபெற்று வந்த வசந்த திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் வசந்த திருவிழா ஏப். 27இல் தொடங்கியது. இதையொட்டி, தினமும் நெல்லையப்பா் -காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கரோனா பொது முடக்கம் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடா்ந்து 11 நாள்கள் நடைபெற்ற இத்திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, நெல்லையப்பா்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.