முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 995 பேருக்கு கரோனா தொற்று

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 995 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 995 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 673 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 29,181ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 976 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 25,426 ஆக உயா்ந்துள்ளது. 260 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 3,495 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 322 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 13,340 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை 208 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 11,863ஆக அதிகரித்துள்ளது. 196 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 1,281 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.