முகப்பு
திருநெல்வேலி

தருவையில் 150 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம்

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தருவையில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 150 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தயாா் நிலையில் உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தருவையில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 150 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தயாா் நிலையில் உள்ளது. அந்த மையத்தை ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நோய்த் தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை தினமும் 600-ஐ கடந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சோ்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தருவையில் 150 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்க வைக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க குழுவும், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மையத்தை ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் தேவைப்பட்டால் அதுகுறித்து தெரிவித்து பெற்றுக் கொள்ளவும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இருக்க முன்னேற்பாடுகள் செய்து கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.