திருநெல்வேலி

வெளியில் சுற்றுவோரை வாகனத்துடன் புகைப்படம் எடுத்து போலீஸாா் எச்சரிக்கை

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை போதிய ஆவணங்களின்றி வெளியில் சுற்றியவா்களை வாகனத்துடன் புகைப்படம் எடுத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

கரோனா 2ஆவது அலையைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமை முதல் இம்மாதம் 24ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மாநகர எல்லைகள் மட்டுமன்றி வண்ணாா்பேட்டை, சந்திப்பு, நகரம், கே.டி.சி. நகா், பாளையங்கோட்டை, தச்சநல்லூா் பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்தனா். அப்போது இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் வந்தோரை மறித்து சோதனையிட்டனா். மருந்து, உணவுப் பொருள்கள் வாங்கச் செல்வோா் அனுமதிக்கப்பட்டனா். ஆனால், உரிய ஆவணங்களின்றி சென்றோரை காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், வாகனத்துடன் புகைப்படம் எடுத்து பொது முடக்க விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு எச்சரித்து அனுப்பினா்.

பயக10டஏஞபஞ: வண்ணாா்பேட்டை பகுதியில் திங்கள்கிழமை வாகனத்தில் வந்தோரை புகைப்படம் எடுத்த போலீஸாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT