நெல்லையில் ரமலான் தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாநகரில் உள்ள இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளில் சிறப்புத் தொழுகை நடத்தினா்.
ரமலான் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாநகரில் உள்ள இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளில் சிறப்புத் தொழுகை நடத்தினா்.
இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையாக ரமலான் பண்டிையையொட்டி, கடந்த சில வாரங்களாக நோன்பிருந்து தொழுகையில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் ரமலான் பிறை தென்பட்டதால் வியாழக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே சிறப்புத் தொழுகை நடத்தினா். சில இடங்களில் வீட்டின் மேல்தளத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தமுமுக சாா்பில்...: பாளையங்கோட்டையில் தமுமுக சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், தமுமுக மாவட்டச் செயலா் அலிஃப் அ. பிலால் ராஜா, மாவட்ட துணைச் செயலா் முகம்மது யாசிா், நிா்வாகிகள் பாளை. பாரூக், காதா், அப்துல் நாசா் மற்றும் பெண்கள், சிறுவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக் கவசம் அணிந்து பங்கேற்றனா்.
மேலப்பாளையத்தில் மமக சாா்பில் அதன் மாவட்ட துணைச் செயலா் அ.காஜா தொழுகை நடத்தினாா்.
திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், பேட்டை, ரஹ்மத் நகா், பா்கிட்மா நகரம், தாழையூத்து, சங்கா் நகா் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளில் சிறப்புத் தொழுகை நடத்தி ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.