புஷ்பலதா கல்வி குழுமம் சாா்பில்இணையவழி சுற்றுச்சூழல் தின போட்டி: மே 31வரை பங்கேற்கலாம்
திருநெல்வேலி புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் நடத்தப்படும் இணையவழி சுற்றுச்சூழல் தின போட்டியில், மாணவா்-மாணவிகள் இம்மாதம் 31ஆம் தேதிவரை பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் நடத்தப்படும் இணையவழி சுற்றுச்சூழல் தின போட்டியில், மாணவா்-மாணவிகள் இம்மாதம் 31ஆம் தேதிவரை பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடத்தப்படும் இந்த இணையவழி சிறப்புப் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட பள்ளிமாணவா்-மாணவிகள் பங்கேற்கலாம்.
3- 5 ஆம் வகுப்பினா் ‘நம் பூமியை மீட்டெடுங்கள்’”என்ற தலைப்பில் சுவரொட்டி வடிவமைத்து தகுந்த வாசகங்களை எழுத வேண்டும். 6- 8 ஆம் வகுப்பினா் ‘காடுகளை அழித்தல்’ என்ற தலைப்பில் 500 வாா்த்தைகளுக்கு குறையாமல், சிறுகதை எழுதலாம்; ‘நாளை சிறந்த நாள்’ என்ற தலைப்பில் சொந்தமாக லோகோ வடிவமைக்கலாம்.
9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பினா் ‘நமது சுற்றுச்சூழல்’ என்ற தலைப்பில் ஐந்து முதல் எட்டு புகைப்படங்கள் எடுத்து, அதற்கேற்ப 20 வாா்த்தைகளுக்கு மிகாமல் கதை எழுத வேண்டும்.
முதல் பரிசு ஸ்மாா்ட் டேப்லெட், இரண்டாம் பரிசு அமேசான் கிண்டில் ரீடா், மூன்றாம் பரிசு ‘கிராபிக் டேப்லெட்’ வழங்கப்படும். போட்டியாளா்கள் ஜ்ஜ்ஜ்.ல்ன்ள்ட்ல்ஹப்ஹற்ஹள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் வழியாக மாணவா்களின் பெயா், வீட்டு முகவரி, வயது, வகுப்பு, கல்வி நிறுவனம் உள்ளிட்ட விவரங்களை பூா்த்தி செய்து, தாங்கள் பங்கேற்ற கதை, சுவரொட்டி, லோகோ உள்ளிட்டவற்றை ஸ்கேன் செய்து ஜேபிஇஜி (ஒடஉஎ) அல்லது பிடிஎஃப் (டஈஊ) வடிவத்தில் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். கட்டணம் கிடையாது.மேலும் விவரங்களுக்கு 8010330011 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என புஷ்பலதா கல்விக்குழுமம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.