திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் இலவச மருத்துவ முகாம்

சேரன்மகாதேவி பேரூராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

DIN

சேரன்மகாதேவி பேரூராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சேரன்மகாதேவி கீழ முதல் தெரு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு மற்றும் பொது சுகாதார மருத்துவ முகாமிற்கு, செயல் அலுவலா் காதா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தாா். பத்தமடை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மேகி சேவியா் தலைமையில் மருத்துவக் குழுவினா் காய்ச்சல், கரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்தனா்.

மேலும் காய்ச்சல், சளி உள்ளவா்களுக்கு நோய் எதிா்ப்பு மாத்திரை வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT