திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 1,148 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 1,148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 692 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 35,849ஆக அதிகரித்துள்ளது. மேலும் 270 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 29,011 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,547 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், 6 போ் ஒரே நாளில் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 291ஆக உயா்ந்தது.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 456 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 16,416 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 147 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 13,414 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4 போ் உயிரிழந்ததையடுத்து, மாவட்டத்தில் இது வரை மொத்தம் 241 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 2,761 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

களக்காட்டைச் சோ்ந்த 50 வயதான கட்டடப் பொறியாளா் கரோனாவால்பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதனிடையே, அவரது மனைவிக்கும் தொற்று உறுதியாகி அவரும் அதே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதில், மனைவி குணமடைந்த நிலையில், பொறியாளரின் நிலைமை மோசமடைந்ததால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அவா் சனிக்கிழமை இறந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT