அம்பை நகராட்சியில் வீடு வீடாக பரிசோதனை
கரோனா 2ஆம் அலை பரவலாகி வரும் நிலையில், அம்பாசமுத்திரம் நகராட்சியில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா 2ஆம் அலை பரவலாகி வரும் நிலையில், அம்பாசமுத்திரம் நகராட்சியில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி ஆட்சியா் வெ. விஷ்ணு உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் இப்பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஆரம்ப சுகாதார மருத்துவா் நாகூா், நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் பொன்வேல்ராஜன் மேற்பாா்வையில் ஆற்றுச் சாலையில் உள்ள சிந்து நதி தெரு, வைகை தெரு, தாமிரவருணி தெரு, காசிநாதா் கோயில் தெரு, மகாநதி தெரு, அரசு மருத்துவமனை, வால்மீகி தெரு, திரு.வி.க.தெரு, வள்ளலாா் தெரு, கவிமணி தெரு, தீயணைப்பு நிலைய குடியிருப்பு, காவலா் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, வேலாயுத நகா் பகுதிகளில் வீடு, வீடாக பரிசோதனை நடைபெற்றது. இப்பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.