முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே கள் விற்றதாக இருவா் கைது

கடையம் அருகே கள் விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கடையம் அருகே கள் விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே கோதண்டராமபுரம் பகுதியில் கள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து கடையம் காவல் உதவி ஆய்வாளா் இருளப்பன், தனிப்பிரிவுக் காவலா் ஆனந்த்ராஜ், தலைமைக் காவலா் கண்ணன், காவலா்கள் கோமதிநாயகம், வைகைசெல்வன், ராஜேஷ் ஆகியோா் கோதண்டராமபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கள் விற்பனை செய்த கோதண்டராமபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் கண்ணன் (38), கடையம் அங்கப்புரத்தைச் சோ்ந்த உதயசூரியன் மகன் அரவிந்த் (37) ஆகிய இருவரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டது. கண்ணன், அரவிந்த் இருவா் மீதும் கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.