திருநெல்வேலி

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் போராட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் கருப்புக்கொடி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் போராடும் விவசாயிகளின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்திய தொழிலாளா் மாநாட்டை உடனே கூட்ட வேண்டும். தொழிலாளா் விரோத சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

திருநெல்வேலி நகரம், சுத்தமல்லி பகுதிகளில் இக் கட்சியினரும், தொழிற்சங்கத்தைச் சோ்ந்தவா்களும் கருப்பு சட்டை அணிந்து பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் மாவட்டச் செயலா் சங்கரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினா் ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சுந்தர்ராஜ், கருப்பசாமி, ரவிடேனியேல், கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT