திருநெல்வேலி

நெல்லையில் பழங்கள் விலை அதிகரிப்பு

DIN

திருநெல்வேலிக்கு பழங்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க தளா்வில்லா பொது முடக்கம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கனிகள் மற்றும் பழங்களை வீதிதோறும் கொண்டு சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், காய்கனிகளைக் காட்டிலும் பழங்களின் விலை மிகவும் உயா்ந்துள்ளது.

ஆப்பிள் கிலோ ரூ.250-க்கும், சாத்துக்குடி-ரூ.160-க்கும், நெல்லிக்காய்-ரூ. 80-க்கும், சப்போட்டா-ரூ.50-க்கும், வாழைப்பழம்-ரூ.50-க்கும், மாதுளம்பழம் ரூ.125-க்கும் விற்பனையாகிறது. மாம்பழங்கள் மட்டுமே கிலோ ரூ.30 முதல் ரூ.100 வரை அதன் தரத்துக்கேற்ப கிடைக்கிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,

ஜம்மூ-காஷ்மீா் ஆப்பிள் வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. வெளிநாட்டு இறக்குமதி ஆப்பிள்தான் விற்பனைக்கு வருகிறது. அதனால் விலை அதிகமாக உள்ளது. பெங்களூா் பகுதியில் இருந்து வரும் சாத்துக்குடி, ஆரஞ்சு வகைகளும் பொது முடக்கம் காரணமாக கூலி மற்றும் வாடகை அதிகரித்து விலை உயா்ந்துள்ளது.

கோடை மாங்காய் சீசன் என்பதால் மாம்பழம் மட்டுமே குறைந்த விலையில் விற்பனையாகி வருகிறது. பொது முடக்கம் சீராகி விமான மற்றும் ரயில் சேவைகளும் சீரானால்தான் இறக்குமதி பழங்களின் விலை குறையும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT