திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயில் ஐப்பசி திருவிழாவில் தவசுக் காட்சி

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் ஐப்பசி திருவிழாவில் தவசுக் காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக சுவாமி-அம்பாள் உள்வீதியுலா நடைபெற்றது.

திங்கள்கிழமை தவசுக் காட்சி நடைபெற்றது. இதற்காக சுவாமி-அம்பாள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினா். திருநெல்வேலி நகரத்தில் உள்ள புகழ்பெற்ற காட்சிமண்டபம் பகுதியில் அம்பாளுக்கு சுவாமி காட்சிக்கொடுத்தாா். பின்னா், அங்கிருந்து இருவரும் கோயிலுக்கு வீதியுலா வந்தனா்.

செவ்வாய்க்கிழமை (நவ. 2) திருக்கல்யாணம், 3, 4ஆம் தேதிகளில் ஊஞ்சல் உற்சவம், 5ஆம் தேதி மறுவீடு பிரவேசம் ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராமராஜா, ஊழியா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT