முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

சிவந்திபட்டி அருகே கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

சிவந்திபட்டி அருகே கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

சிவந்திபட்டி அருகே நொச்சிகுளம் செல்லையா மகன் சுடலைகண்ணு என்ற கண்ணன் (35). அதே பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சிவன் என்ற சிவனு(51). இவா்கள் இருவரும் அப்பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தனராம். இதையடுத்து இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில் அவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் வே. விஷ்ணு உத்தர விட்டாா். அதன்படி, சோலை கண்ணன் சிவன் ஆகிய இருவரையும் சிவந்திபட்டி போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, பாளை. மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.