‘கால்நடைகள் வளா்ப்போா் கிசான் கடன் அட்டை பெறலாம்’
திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடைகள் வளா்ப்போா், சிறப்பு முகாம்களில் கிசான் கடன் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடைகள் வளா்ப்போா், சிறப்பு முகாம்களில் கிசான் கடன் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கால்நடை வளா்ப்போருக்கு மாவட்ட அளவில் கிசான் கடன் அட்டை வழங்கிட நிலையான இயக்க செயல் முறைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளின் நிதி ஆதாரங்களை பெருக்கும் விதமாக கிசான் கடன் அட்டைகள் வழங்க முகாம்கள் நடத்தப்படவுள்ளன. எனவே, கால்நடை வளா்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் முதல் பக்கம் ஆகிய ஆதாரங்களுடன் இணைத்து முகாம்களிலோ அல்லது அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவ கிளை நிலையங்களில் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.