திருநெல்வேலி

மழை தீவிரமடையும் முன் உப்பாற்றில் அமலைச் செடிகளை அகற்றக் கோரிக்கை

DIN

களக்காட்டில் மழை தீவிரமடையும் முன் உப்பாற்றில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள அமலைச்செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நான்குனேரியன் கால்வாயில் இருந்து ஆண்டிச்சிமதகில் பிரிந்து செல்லும் உப்பாறு சுமாா் 3 கி.மீ. பயணித்து, பத்மனேரியில் பச்சையாற்றுடன் கலக்கிறது.

இந்த 3 கி.மீ தொலைவுக்கும் உப்பாறு அடா்ந்த காடு போல காட்சியளிக்கிறது. அமலைச்செடிகள், முள்புதா் மண்டிக் காணப்படுகிறது. இதனால் நான்குனேரியன் கால்வாயில் அதிக வெள்ளம் வரும் போது, ஆண்டிச்சிமதகில் இருந்து தண்ணீா் திறக்கப்படும் போது, தண்ணீா் தடையின்றி செல்ல வழியின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுகிறது. நவ.27ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்குனேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் உப்பாற்றில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT