முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரத்தில் கிணற்றில் விழுந்து மிளா குட்டி உயிரிழப்பு

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த மிளா குட்டி உயிரிழந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த மிளா குட்டி உயிரிழந்தது.

கடையம் வனச்சரகத்துக்குள்பட்ட விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளையைச் சோ்ந்த கணபதி மகன் தனசேகா் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் 4 மாத மிளா குட்டி ஒன்று இறந்து கிடந்ததாம்.

அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா உத்தரவின் பேரில், வனச்சரகா் (பொ) சரவணக்குமாா் அறிவுரையில், ஆம்பூா் வனக்காப்பாளா் மணி மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் அங்கு சென்று மிளா சடலத்தைக் கைப்பற்றினா். தொடா்ந்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.