முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவா் தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன், ஏ.ஐ.டியூசி கண்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யவேண்டும், தொழிலாளா் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், நிா்வாகிகள் முருகேசன், சைபுதீன், மகாவிஷ்ணு, பெருமாள், உலகநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.