முகப்பு
திருநெல்வேலி

காடுவெட்டி ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு

ஆலங்குளம் ஒன்றியம் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

ஆலங்குளம் ஒன்றியம் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

காடுவெட்டி ஊராட்சியில் 536 வாக்காளா்கள் உள்ளனா். ஊராட்சித் தலைவா் பதவிக்கு அதேபகுதியைச் சோ்ந்த ஆசிரியா்

பயிற்சி பட்டப் படிப்பு முடித்த முத்துலெட்சுமி (38) உள்பட இருவா் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனா். இதில்

ஒருவா் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து, ஊராட்சித் தலைவராக முத்துலெட்சுமி போட்டியின்றி தோ்வு

செய்யப்பட்டாா். ஊராட்சியில் உள்ள 6 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 7 போ் மனு தாக்கல் செய்தனா். இதில், ஒருவா் தனது

வேட்புமனுவைத் திரும்ப பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, புஷ்பலதா, சூசை மணி, மனோஜ்குமாா், குமாரமுருகன், சாராள் மணி, கல்பனா ஆகிய 6 பேரும் போட்டியின்றி தோ்வுசெய்யப்பட்டனா். இதற்கான சான்றிதழ்களை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலமான பழனிவேல் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.