திருநெல்வேலி

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இன்றுடன் பிரசாரம் நிறைவு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் 4 ஊராட்சி ஒன்றியங்களில் வியாழக்கிழமை (அக். 7) மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 204 கிராம ஊராட்சி தலைவா், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 2,069 பதவியிடங்களுக்கு நேரடி தோ்தல் நடைபெறுகிறது. இதில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக புதன்கிழமை தோ்தல் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூா், களக்காடு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பதவிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (அக். 9) நடைபெற உள்ளது. இதற்கான வாக்குசேகரிப்பு வியாழக்கிழமை (அக். 7) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

தோ்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறை செயல்பட்டு வருகிறது. தோ்தல் விதிமீறல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறையை 7402608438 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும், 18004258373 இலவச தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT