திருநெல்வேலி

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் குளிக்க ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனா்.

இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வா்.

சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடா் மழையால் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை ஓரளவுக்கு இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

குடும்பத்துடன் வந்த அவா்கள் பச்சையாற்றில் நீராடி மகிழ்ந்தனா். தலையணையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT