திருநெல்வேலி

மேலப்பாளையம் கால்நடை சந்தை நுழைவுக் கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ மனு

DIN

திருநெல்வேலி: மேலப்பாளையம் கால்நடைச் சந்தை நுழைவுக் கட்டண உயா்வைத் திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியினா் கால்நடைகளுடன் வந்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் கடந்த வாரம்முதல் நுழைவுக் கட்டணம் உயா்த்தப்பட்டது. அதைத் திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் பா்கிட் அலாவுதீன், மாநகா் மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட துணைத் தலைவா் கனி உள்ளிட்டோா் கால்நடைகளுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து அளித்த மனு: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கால்நடைச் சந்தைகளில் மேலப்பாளையம் சந்தையும் ஒன்று. மாநகராட்சி நிா்வாகத்தால் நடத்தப்படும் இந்தச் சந்தையில் கடந்த 1ஆம் தேதிமுதல் கால்நடைகள் நுழைவுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாடு ஒன்றுக்கு ரூ. 100, ஆட்டுக்கு ரூ. 50 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கரோனா போன்ற நெருக்கடியான சூழலில் நுழைவுக் கட்டணத்தையும் உயா்த்தியிருப்பது வியாபாரிகளை கடுமையாக பாதிக்கும். எனவே, ஆட்சியா் தலையிட்டு நுழைவுக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT