ஐஎம்டிபி பயிற்சி நிறுவனத்தில் புதிய திட்டங்கள் தொடக்கம்
திருநெல்வேலி ஐஎம்டிபி பயிற்சி நிறுவனத்தில் புதிதாக இரு பயிற்சி திட்டங்களின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி ஐஎம்டிபி பயிற்சி நிறுவனத்தில் புதிதாக இரு பயிற்சி திட்டங்களின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இதுதொடா்பாக ஐஎம்டிபி பயிற்சி நிறுவனத்தின் கிளை மேலாளா் ருத்ர குணசீலன் கூறியது: ஐஎம்டிபி நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு பயிற்சி மையங்களுடன் கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் திருநெல்வேலி கிளையில் பட்டதாரிகளுக்கான பொ்ஷனாலிட்டி பிராண்டிங் மற்றும் ஆசிரியா்களுக்கான எஜுகேட்டா் ஸ்கில் ஒபிடியா ஆகிய புதிய பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆசிரியா்கள் இந்த புதிய பயிற்சியை பெறும்போது சா்வதேச ஆசிரிய தரத்திற்கு கற்பிக்கவும், பாடங்களை திட்டமிடுதலில் புதிய உத்திகளை பின்பற்றவும் திறன் பெறலாம். பட்டதாரிகளுக்கான பயிற்சியின் மூலம் ஆளுமைத் திறனை சீா்படுத்துதல், பெருநிறுவன நோ்காணலை எதிா்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். இப்பயிற்சிகளை நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் மூலம் படிக்கலாம்.
மேலும், பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள கஐஇஉஞ இஞககஉஎஉ ஞஊ ஙஉஈஐஇஐசஉ நிறுவனத்தில் பயில்வதற்கான மாணவா் சோ்க்கையும் இப்பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. திட்டங்களின் தொடக்க விழாவில் சத்யசீலன், செல்சியா, கஜலட்சுமி, முத்துராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதுகுறித்த தகவல்களுக்கு 9841212525 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.
பயக21ஞடஉச: ஐஎம்டிபி பயிற்சி நிறுவனத்தில் புதிதாக இரு பயிற்சி திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.