முகப்பு
வணிகம்

பொதுத்துறை எஃகு நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு அசோக் குமார் பாண்டா பரிந்துரை!

செயில் நிறுவனத்தின் உயரிய பதவிக்கு, அந்நிறுவனத்தின் நிதி இயக்குநரான அசோக் குமார் பாண்டாவை, அரசுப் பணியாளர் தேர்வு தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

Updated On : 28 மார்ச் 2026, 5:53 pm IST
செயில்
பகிர்:

புதுதில்லி: எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை மகாரத்னா நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (செயில்), நிறுவனத்தின் உயரிய பதவிக்கு, அந்நிறுவனத்தின் நிதி இயக்குநரான அசோக் குமார் பாண்டாவை, அரசுப் பணியாளர் தேர்வு தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்காக நேர்காணல் முடிவடைந்த நிலையில், இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 10 நபர்களில் பாண்டாவும் ஒருவர்.

இதனிடையில், தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அமரேந்து பிரகாஷின் பதவிக்காலம் ஏப்ரல் 2, 2026 அன்று முடிவடைய உள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மார்ச் 28 தேதியிட்ட ஓர் அறிவிக்கையில், செயில்-இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்கு அசோக் குமார் பாண்டாவை பரிந்துரைத்துள்ளதாக பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மின் பொறியியலில் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, செயில் மேலாண்மைப் பயிற்சியாளராக தனது பணியை தொடங்கினார் அசோக் குமார் பாண்டா. பாண்டா தற்போது ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிதி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.